ஆப்கானில் போலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல்; குறைந்தது 30 பேர் மரணம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு அருகே போலிஸ் வாகனங்கள் மீது தலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கெல்லப்பட்டதாகவும் 40 பேர் காயம் அடைந்ததாகவும் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். காபூலின் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து காவலர்களை ஏற்றிவந்த வாகனம் வியாழக் கிழமை திடீரென வெடித்துச் சிதறியது. கார் குண்டு அல்லது தற்கெலைப் படைத் தாக்குதல் மூலம் பேலிஸ் வாகனம் தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் அந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பெறுப்பேற்பதாக, தலிபான் குழு அறிவித்துள்ளது. ஆப்கானில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இது என்று கூறப் பட்டது. இம் மாதத் தொடக்கத்தில் காபூலில் ஒரு பேருந்து தாக்கப் பட்டதில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு காவலர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பில் சேதமடைந்த ஒரு பேருந்து அருகே போலிசார் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!