மியன்மாரில் வழிபாட்டுத் தலத்தை தீயிட்டுக் கொளுத்திய கும்பல்

யங்கூன்: வடக்கு மியன்மாரில் ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஒன்று முஸ்லிம்களின் வழிபாட்டுக் கூடத்தை தீயிட்டுக் கொளுத்தி யுள்ளது. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் பரவி வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த சில ஆண்டுகளாக சமய வன்முறை அதிகரித்து வந்துள்ளது. அங்கு பெருகி வரும் பெளத்த தேசியவாத உணர்வும் பதற்றமன நிலையிலுள்ள வகுப்புவாத உணர்வுகளும் ஆங் சான் சூச்சி அம்மையாரின் புதிய அரசாங் கத்துக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.

இங்கு வெள்ளிக்கிழமையன்று கச்சின் மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் கழிகள், கத்திகள் போன்வற்றுடனும் மற்ற ஆயுதங்களுடனும் சென்று அங்குள்ள ஒரு பள்ளிவாசலை சூறையாடி யதாக அரசாங்க செய்தித் தகவல் கூறுகிறது. "அந்தக் கும்பலைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அது பள்ளிவாசலை தீக்கிரையாக்கி யது," என்று குளோபல் நியூ லைட் என்ற அந்த செய்தித்தாள் விளக்கியது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப் படவில்லை என்றும் அந்தச் செய்தித்தாள் கூறியது. மியன்மாரில் மனித உரிமைகள் பற்றி விசாரிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியான குமாரி யாங்ஹு லீ தமது 12 நாள் பயணத்தை முடித்த நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந் துள்ளது.

"மியன்மார் சமுதாயத்தில் சமய அடிப்படையிலான பதற்றமான சூழல் பரவலாக உள்ளது," என அவர் எச்சரித்துள்ளார். அவர் தமது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில், சென்ற ஆண்டு மியன்மாரில் மற்றொரு பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை தேவை என்று கூறியிருந்தார். "இன, சமய சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதும் வன்முறையில் ஈடு படுவதும் மியன்மாரில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை அரசாங்கம் தெள்ளத் தெளிவாக விளக்க வேண்டும்," என்று அவர் விளக்கினார்.

மியன்மாரில் ராணுவ ஆட்சி மன்றம் 2011ஆம் ஆண்டில் பதவி விலகியதிலிருந்து அங்கு சமய சகிப்பின்மை வளர்ந்து வந்துள்ளது. இது அந்நாட்டில் ஜனநாயக ஆட்சியின் முன்னேற்றத்துக்கு தடையாக விளங்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை யில் இறங்கினால் நிலைமை மேலும் மோசமடையும் என அதி காரிகள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

மியன்மாரில் ஆக மோசமான சமய வன்முறைச் சம்பவங்கள் கடந்த 2012ஆம் ஆண்டு ரக்கைன் மாநிலத்தில் வெடித்தன. இந்த வன்முறைச் சம்பவங்களில் பலர் பலியானதுடன் பல்லாயிரக்கணக் கான ரோகின்யா முஸ்லிம்கள் அகதிகளாக முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!