இரண்டு கட்சிகள் கடும் போட்டி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு முக்கிய கட்சி களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. வாக்குகள் எண்ணப் பட்ட நிலையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக் காது என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதனால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம் உள்ளது. இருப்பினும் வலதுசாரி மிதவாதக் கட்சி குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப் படுவதாக முன்னதாக வெளிவந்த தகவல் கூறியது. வாக்களிக்கத் தகுதி பெற் றிருந்த 15.5 மில்லியன் பேரில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்ததாக கூறப் பட்டது. நேற்று நடந்த தேர்தலில் சிறிய கட்சி வேட்பாளர்கள் சிலரும் வெற்றி பெறக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுவதால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமை யும் சாத்தியமும் உள்ளது.

தற்போதைய அரசாங்கம், நாடாளுமன்றத்தில் சில முக்கிய இடங்களை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர் பார்க்கப்படும் வேளையில் தொழிற்கட்சி, நாடாளுமன்ற கீழ் அவையில் 55 இடங்களுக்கும் அதிகமாக இடங்களைக் கைப் பற்றக்கூடும் என்று தெரிகிறது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் எடுத்துள்ள முடிவு, ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிற்கு நன்மை அளிப்பது போல் தோன்று கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி யின் தலைவர் பில் ஷார்ட்டன், இத்தேர்தலில் தான் வெற்றி பெறப்போவதாகக் கூறி யுள்ளார். ஆனால் இத்தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெறுவது சிரமம் என்பதை அரசியல் ஆர்வலர்கள் ஒப்புக் கொண் டுள்ளனர்.

அரசாங்கத்தை அமைக்க கூட்டணிக் கட்சி போதிய இடங்களைப் பெறவில்லை என்றால் நாடாளுமன்ற கீழ் அவையில் தொங்கு நாடாளு மன்றம் அமைவதற்கான சாத்தி யம் உள்ளது. திரு டர்ன்புல், சிறிய கட்சிகளுடனும் சுயேச்சை வேட்பாளர்களுடனும் உடன்பாடு காண வேண்டிய அவசியம் உள்ளது. நாடாளுமன்ற கீழ் அவையில் கூட்டணிக் கட்சி போதிய இடங்களை தக்க வைத்துக் கொண்டாலும் செனட் சபையில் இரு முக்கிய கட்சிகளும் சரி சமமான இடங்களைக் கைப்பற்றி னால் ஒரு சட்டத்தை நிறை வேற்றுவதில் அரசாங்கம் சிக்கலை எதிர்நோக்கும்.

தேர்தல் பிரசாரத்தின்போது திரு டர்ன்புல், பொருளியலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். ஊழியர்களுக்கு மற்றும் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறு வனங்களுக்கு கட்டணக் கழிவு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 4 பிரதமர்கள் பதவி வகித்து விட்டனர். ஆளும் தேசிய கூட்டணியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கடந்த ஆண்டு டேனி அபட் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தெடர்ந்து புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்றுக் கெண்டார். மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் புதிய தேர்தல் தேதியை அவர் அறிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் வாக்களித்த பிறகு ஆதரவாளர்களைப் பார்த்து கை அசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!