பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; பாதிக்கப்பட்ட மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்த 43 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அங்குள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிலர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதில் பாகிஸ்தான், -ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள சுமார் 30 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சித் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், மாநில ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!