பங்ளாதே‌ஷில் 20 பேரைக் கொன்றவர்கள் உள்ளூர் தீவிரவாதக் குழு உறுப்பினர்கள்

டாக்கா: பங்ளாதே‌ஷில் உள்ள ஒரு பிரபல உணவகத்தினுள் நுழைந்து துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த 20 பேருக்கு தேசிய அளவில் துக்க தினம் இரு நாட்களுக்கு அனுசரிக்கப்படுவதாக பங்ளாதேஷ் அரசாங்கம் அறிவித் துள்ளது. அத்தாக்குதலில் கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேர் வெளி நாட்டினர். இத்தாலியர்கள் 9 பேர், ஜப்பானியர்கள் 7 பேர், இந்தியப் பெண் ஒருவர், ஓர் அமெரிக்கர் இறந்தவர்களுள் அடங்குவர். மற்ற இருவர் பங்ளாதேஷ் நாட்டவர்கள்.

தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். டாக்காவில் பிரபல உணவகத் தினுள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்து 20 பேரை கொன்ற வர்கள் உள்நாட்டு தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிகளுடனும் ஆயுதங் களுடனும் நுழைந்து பலரைக் கொன்று குவித்தவர்கள் ஜமாய்த் துல் முஜாஹிதின் பங்ளாதேஷ் குழுவின் உறுப்பினர்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

பங்ளாதே‌ஷில் செயல்பட்டு வரும் அக்குழு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்டுள்ள குழு என்றும் அவர் சொன்னார். பங்ளாதேஷ் மின்னல் படை யினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் துப்பாக்கிக்காரர்களிடம் சிக்கியிருந்தவர்களில் 13 பேர் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

பங்ளாதேஷ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் நடந்த கண்விழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் கையில் மெழுவர்த்தியும் பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என்ற வாசக அட்டையையும் வைத்திருந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!