மலேசிய நகர்ப்பகுதிகளில் கூடுதல் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மாணவர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதால் அதனைச் சமா ளிக்கும் வகையில் நகர்ப்புறங்களில் அதிகமான தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட்டு வருவதாக மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நகர்ப்பகுதிகளில் புதிய தமிழ்ப் பள்ளி களைக் கட்டவும் ஏற்கெனவே உள்ள பள்ளிகளை மேம்படுத்தவும் கடந்த ஏழு ஆண்டுகளில் 730 மில்லியன் மலேசிய ரிங்கிட் தொகையைக் கல்வி அமைச்சு செலவிட்டுள்ளதாகத் திரு சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிக்கு பிரதமர் துறை அமைச்சும் ஆதரவளித்து வருவதாக அவர் சொன்னார். செராஸ், கிள்ளான் பகுதிகள் உட்பட மேலும் 13 தமிழ்ப் பள்ளி களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக 20 மி. ரிங்கிட் தொகையை பிரதமர் துறை அமைச்சு ஒதுக்கியதாக அவர் கூறினார். அம்பாங் தமிழ்ப் பள்ளிக்கான அடிக் கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய திரு சுப்பிரமணியம், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி," என்றார்.

அம்பாங் தமிழ்ப் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் மஇகா தலைவர் எஸ்.சுப்பிரமணியம் (நடுவில்). படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!