சீனாவில் வெள்ளப்பெருக்கு; பல மில்லியன் பேர் பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையிலும் வெள்ளப் பெருக்கிலும் சிக்கி 150க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் மத்திய பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் உள்ள பல மாநிலங்கள் வெள்ளப்பெருக் கினால் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை, புயல்காற்று, வெள்ளப் பெருக்கு இவற்றால் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

குய்சோவ் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 23 பேர் உயிருடன் புதையுண்டதாக ஊடகத் தகவல் கள் கூறின. கனமழை காரணமாக சீனாவின் யாங்சி ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீரில் பல வீடுகள் மூழ்கிய நிலையில் வீட்டுக் கூரைகளில் தஞ்சம் அடைந்த பலரை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!