ஐஎஸ்ஐஎஸ் சந்தேக நபர்கள் பலர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர் புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப் பட்டுள்ளதாக மலேசியாவின் தலைமை போலிஸ் அதிகாரி காலிட் அபு பக்கர் கூறியுள்ளார். தலைமைச் சட்ட அதிகாரி முகமது அபாண்டி அலியின் இல்லத்தில் நடைபெற்ற நோன்புப் பெரு நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர், கைது பற்றி 'தி ஸ்டார்' செய்தியாளரிடம் உறுதி தெரி வித்தார். அதே நேரம் கடந்த வாரம் பூச்சோங் இரவு விடுதியில் நடை பெற்ற கையெறி குண்டு சம்ப வத்தில் மேலும் இரு சந்தேக நபர் களைத் தேடும் வேட்டை தொடரு வதாகவும் திரு காலிட் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூச்சோங்கில் மோவிடா உல் லாச இரவு விடுதியில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் எட்டுப் பேர் காயமுற்றனர். ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதல் இது என்றும் மலேசியாவில் அத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்றும் முன்னதாகக் கூறப்பட்டது. "தேடப்படும் சந்தேக நபர்கள் ஒளிந்துகொண்டு உள்ளார்கள். ஆனால் அவர்களைச் சுற்றி வளைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம்," என்று நேற்று திரு காலிட் குறிப்பிட்டார். இந்த கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக 28 வயது முகமது பைஃபுதின் முஜி, 33 வயது ஜசனிஸாம் ரோஸ்னி ஆகி யோர் நாடு முழுவதும் தேடப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களையும் போலி சார் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகமான போலிசார் குவிக்கப் பட்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு காலிட், போராளிகளின் நட வடிக்கைகளையும் அவர்கள் புதி தாக விடுக்கும் எந்தவொரு மிரட் டலையும் பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகங்களைக் கேட்டுக் கொண்டார். "சந்தேக நபர்கள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற நாம் இடம் தந்துவிடக்கூடாது. அதிக மான கொடூரச் செயல்களை நிகழ்த் துவதன் மூலம் உள்ளூர் குழுத் தலைவர் ஆகிவிடலாம் என்னும் அவர்களின் நோக்கத்தை நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம்," என் றும் அவர் கூறினார்.

உள்ளூர் ஐஎஸ்ஐஎஸ் குழுவின் தலைவர் ஆகிவிட மூன்று மலேசியர்கள் துடிப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நெகிரி செம்பிலானைச் சேர்ந்த முகமது ரஃபி உதின், மலாக்காவின் முகமது வான்டி முகமது ஜேடி, பேராக்கைச் சேர்ந்த ஸைனுரி கமருதின் ஆகி யோரே அவர்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே விசாரணைக்காக இருவர் தடுத்து வைக்கப்பட்டதைத் தவிர்த்து வேறு எந்த போலிசாரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் தூண்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!