பள்ளிக்கூடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு உரைகளை இடம் பெறச் செய்வது குறித்து போலி சாருடன் மலேசிய கல்வி அமைச்சு ஆலோசித்து வருகிறது. கல்வி துணை அமைச்சர் சோங் சின் ஊன் நேற்று இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்பு நட வடிக்கையின் தொடக்கநிலை யாக இது இருக்கும் என்றும் இதன் மூலம் ஐஎஸ் சித்தாந்தம் பள்ளிக்கூடங்களுக்குப் பரவி விடாமல் தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பொருந்தும் வகை யிலான திட்டங்களைப் பள்ளிக் கூடங்களில் அமல்படுத்துவது தொடர்பான பணிகளிலும் தமது அமைச்சு ஈடுபட்டு வருவதாக சோங் குறிப்பிட்டார். அண்மையில் நாடு முழுக்கப் பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர் இச்சம்பவங் களைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு அதிகாரிகளைத் தாம் கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
பொதுமக்களுக்கு எளிதில் துப்பாக்கி கிடைப்பது குறித்துத் தாம் வியப்படைவதாகவும் இது ஒரு கவலைக்குரிய நிலைமை என்றும் கூறிய அவர் இவற்றை முறியடிக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்றார். இதற் கிடையே, பயங்கரவா தத்தைப் பயங்கரவாதிகளால் முறியடிக்கும் புதிய முயற்சியை மலேசியா மேற்கொள்ளவுள்ளது.