ஒபாமா: போலிசார் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்

வார்சா: அமெரிக்காவின் டாலஸ் நகரில் போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்காவை அதிர்ச்சியடைச் செய்துள்ளது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட கொடிய, திட்டமிட்ட தாக்குதல் அது என்றும் அது வெறுக்கத் தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "சட்ட அமலாக்க அதிகாரி களுக்கு எதிராக நடத்தப்படும் எந்த ஒரு வன்முறைக்கும் அல்லது இத்தகைய தாக்குதல் களுக்கும் எந்தக் காரணமுமே கூற முடியாது என்று திரு ஒபாமா கூறினார். போலந்தில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்ளும் திரு ஒபாமா, டல்லஸ் தாக்குதல் பற்றிய செய்தி அறிந்ததும் அங்கிருந்தபடியே அத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார். இந்த படுகொலையில் ஈடு பட்டவர்கள் பிடிபட்டு நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

டாலஸ் நகர மேயருக்கும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் திரு ஒபாமா தமது ஆழ்ந்த அனு தாபத்தை தெரிவித்துக் கொண் டார். ஐந்து போலிஸ் அதிகாரி கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த புலன்விசாரணையில் மத்திய புலன் ஆய்வுத் துறை ஈடுபட்டுள்ளதை திரு ஒபாமா சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் இருவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டாலஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்: படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!