தைவான் ரயிலில் வெடிப்பு: 25 பேர் காயம்

தைப்பே: தைவானில் ஒரு பயணிகள் ரயிலில் வெடி பொருள்களை வெடிக்கச் செய்தது தொடர்பில் 55 வயதான சந்தேகப் பேர்வழி ஒருவரை அந்நாட்டுப் போலிசார் கைது செய்துள்ளனர். அந்த வெடிப்பில் காயமடைந்த 25 பேரில் அந்த நபரும் ஒருவர். அவரது புனைப்பெயர் லின். அந்த வெடிப்பு பயங்கரவாதத் தொடர்பிலானது அல்ல என்று முதல்கட்ட தகவல்கள் உணர்த்து வதாக போலிசார் கூறினர்.

நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ரயில்வே போலிஸ் கழகத்தின் பேச்சாளர் வாங் பாவ்=சாங், அந்த வெடிப்பு பயங்கரவாதம் தொடர்பிலானது என்று கருதுவதற்கு அந்த குண்டு வெடிப்புக்கு முன்னரும் அதற்குப் பிறகும் உளவுத் தகவல் எதுவும் போலிசாருக்கு கிடைக்க வில்லை என்று கூறினார். வியாழக்கிழமை இரவு சோங்சான் ரயில் நிலையத்திற்கு அருகே பயணிகள் ரயிலுக்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்பு களுக்கு இதுவரை எந்தக் குழுவும் அல்லது எந்த பயங்கர வாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!