ஆஸ்திரேலியாவில் ஆளும் கூட்டணி வெற்றி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தாக அந்நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித் துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு திரு டர்ன்புல்லுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ள வேளையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வரும் வேளையில் மிதவாத=தேசிய கூட்டணி ஆட்சி அமைப் பதற்கு போதிய இடங்களைப் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இருப் பினும் அக்கூட்டணி நாடாளு மன்ற கீழ் அவையிலும் பிரதிநிதிகள் சபையிலும் பெரும்பான்மை வகிக்க போதிய 76 இடங்களைப் பெறவில்லை.

ஆனால் அக்கட்சி குறைந்தது 74 இடங்களைப் பெற வேண்டும். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மற்றும் இரு சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் இருவர் ஆகியோரின் ஆதரவை அக்கூட்டணி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான தொழிற் கட்சி தற்போது 66 இடங் களைப் பெற்றுள்ளது. இந் நிலையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய திரு டர்ன்புல், தேர்தலில் ஆளும் கூட்டணி நாடாளுமன்றத்தில் போதிய இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தார். இத்தேர்தலில் போட்டி கடுமையாக இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். முன்னதாக தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட திரு ஷார்ட்டன், திரு மால்கம் டர்ன்புல்லும் அவரது கூட்டணியும் புதிய அரசாங் கத்தை அமைக்கவிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார். இக்கட்டான தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்கு நெருக்குதல் கொடுக்கலாம்.

ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!