பினாங்கில் திடீர் தேர்தல் பற்றி ஆலோசனை

பெட்டாலிங் ஜெயா: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு திடீர் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சித் (டிஏபி) தலைவர்கள் கலந்தாலோசித்து வருவதாக மலாய் மெயில் தகவல் கூறியது. திரு லிம்மிற்கும் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பினாங்கு மக்களின் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிய திடீர் தேர்தல் வழிவகுக்கும் என்று பினாங்கு மாநில டிஏபி கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நம்பிக்கை கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. திரு லிம் தொடர்ந்து பதவியில் நீடித்திருக்க டிஏபி கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே தங்கள் ஒருமித்த ஆதரவைத் தெரி வித்துள்ளனர்.

லிம் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் நோக் கம் கொண்டவை என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பினாங்கு துணை முதலமைச்சர் பி.ராமசாமி, இரண்டு வழிமுறைகளைப் பின்பற்ற டிஏபி முடிவு செய்துள்ளதாகக் கூறினார். ஒன்று, லிம்முக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிய திடீர் தேர்தலை நடத்துவது. இன்னொன்று, பொதுத் தேர்தலுக்கு காத்திருப்பது. பொதுத் தேர்தல் 2018 ஆகஸ்டு மாதம்தான் நடைபெறும். இந்த இரண்டில் எந்த வழியைப் பின்பற்றுவது என்பதை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை என்று திரு ராமசாமி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!