தெற்கு சூடானில் நீடிக்கும் கலவரம்

ஜூபா: தெற்கு சூடானில் அதிபர், துணை அதிபர் இவ் விருவரின் விசுவாசப் படை களுக்கு இடையே மீண்டும் நேற்று சண்டை மூண்டது. இவ்விரு படையினருக்கும் தலைநகர் ஜூபாவில் நேற்று கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் பயங்கர வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் அங் கிருந்த நிருபர் ஒருவர் கூறினார். சண்டையில் கனரக பீரங்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். அங்கு கடந்த வெள்ளிக் கிழமை முதல் நடந்து வரும் சண்டையில் 200க்கும் அதிக மானோர் உயிர் இழந்ததாகவும் சண்டைக்குப் பயந்து ஏராள மானோர் அங்கிருந்து வெளி யேறி வருவதாகவும் தகவல்கள் கூறின.

தெற்கு சூடானில் நீடிக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐநா பாதுகாப்பு மன்றம், சண்டையில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வேளை யில் அங்கு மீண்டும் வன் முறைகள் வெடித்துள்ளன. தெற்கு சூடான் அதிபர் சல்வார் கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மக்சார் இவர் களின் ஆதரவுப் படையினருக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

ஜூபாவில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐநா ஊழியர்கள் இருவர் சண்டையில் உயிரிழந்ததாகவும் ஐநா ஊழியர்கள் மேலும் சிலர் காயம் அடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் கூறின. ஐநா அலுவலகங்கள் தாக்கப்பட்டது குறித்து ஐநா அதன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி யுள்ளது. இதற்குப் பதில் நடவடிக்கையாக அங்கு மேலும் கூடுதல் எண்ணிக்கையில் அமைதிப் படையினரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஐநா பாதுகாப்பு மன்றம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!