மலாக்காவுக்கு ஐஎஸ் தாக்குதல் மிரட்டல்

மலாக்காவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தக்கூடும் என்று சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படும் எச்ச ரிக்கையின் உண்மைத்தன்மை குறித்து போலிசார் ஆராய்ந்து வருகின்றனர். சீன, ஆங்கில மொழிகளில் இடம்பெற்றுள்ள அந்த எச்சரிக்கை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் வழியாக வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஜோன்கர் ஸ்திரீட், ஸ்டேட் தய்ஸ் மற்றும் பல கேளிக்கை மையங்கள் மீது தாக்குதல் நடத் தப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறுகிறது. வாட்ஸ்அப் வழியாக அந்த எச்சரிக்கை கிடைக்கப் பெற்ற ஒரு காப்பிக்கடை உரிமையாளர் அது குறித்து மலாக்கா போலிசாரிடம் புகார் அளித்ததாகத் தெரிவிக்கப் பட்டது.

அந்த மிரட்டல் உண்மையானது தானா என்று போலிசார் ஆராய்ந்து வரும் அதே வேளையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று மலாக்கா மத்திய போலிஸ் தலைவர் ஷேக் அப்துல் அட்ஸிஸ் ஷேக் அப்துல்லா கூறினார். "தெங்கெரா போலிஸ் நிலை யத்தில் அந்தக் காப்பிக்கடை உரிமையாளரால் அளிக்கப்பட்ட புகாரைத் தவிர்த்து வேறு எந்தப் புகாரும் எங்களுக்குக் கிடைக்க வில்லை," என்றும் அவர் சொன்ன தாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ள தால் அந்த மிரட்டல் செய்தியைப் பரப்பவேண்டாம் என்று பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படுவதாக வும் குறிப்பிட்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!