ஹில்லரியை அதிபராக்க உறுதிபூண்ட சாண்டர்ஸ்

வா‌ஷிங்­டன்: ஹில்லரி கிளின்­டனை ஜன­நா­ய­கக் கட்­சி­யின் அதிபர் வேட்­பா­ள­ராக ஏற்­ப­தாக திரு பெர்னி சான்­டர்ஸ் கூறி­யுள்­ளார். பல மாதங்க­ளாக அந்தப் பதவிக்­காக ஹில்லரி கிளின்­ட­னுக்கு எதிராக பிர­சா­ரம் செய்து போட்­டி­யு­மிட்­ட­வர் சாண்டர்ஸ் என்பது குறிப்­பி­டத்தக்கது. சென்ற மாதத் தொடக்­கத் திலேயே அதிபர் பதவிக்­குப் போட்­டி­யி­டத் தேவையான எண்­ணிக்கை­யில் பேரா­ளர்­களின் ஆத­ரவைப் பெற்ற திரு­வாட்டி கிளிண்ட­னுக்கு எதிராக சுமார் ஓராண்டா­கக் களத்­தில் இருந்த­வர் திரு சாண்டர்ஸ். நியூ ஹாம்­ஷ­ய­ரின் போர்ட்ஸ்­மௌத்­தில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்­கப்­பட்ட மேடையில் திருமதி கிளிண்ட­னும் திரு சாண்டர்­ஸும் ஒன்றா­கத் தோன்­றி­னர்.

அப்போது, திருமதி ஹில்லரி கிளிண்டனை ஜன­நா­ய­கக் கட்­சி­யின் அதிபர் வேட்­பா­ள­ராக அறி­வித்­த­து­டன் அவர் அடுத்த அதி­ப­ரா­வதை தாம் உறு­தி­செய்­யப்­போ­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார் திரு சாண்டர்ஸ். குடி­ய­ர­சுக் கட்­சி­யின் உத்தேச அதிபர் வேட்­பா­ளர் டோனல்ட் டிரம்ப் தன்­னு­டன் இணைந்து குடி­ய­ர­சுக் கட்­சி­யின் சார்பில் துணை அதிபர் பதவிக்­குப் போட்­டி­யி­ட­வி­ருப்­போ­ரின் பெயரை வெள்­ளிக்­கிழமை நடை­பெ­ற­வுள்ள பிரசார நிகழ்ச்­சி­யில் அறி­விப்­பார் என எதிர்­பார்க்­கப்­ படு­கிறது.

அமெ­ரிக்­கப் பிர­தி­நி­தி­கள் சபையின் பேச்­சா­ளார் நெட் கிங்ரிச், இண்­டி­யானா­வின் ஆளுநர் மைக் பென்ஸ், நியூ­ஜெர்­சி­யின் ஆளுநர் கிரிஸ் கிறிஸ்டி, ஓய்­வு­பெற்ற படைத் தளபதி மைக்கேல் ஃப்ளைன் ஆகி­யோ­ரில் ஒருவரை டிரம்ப் தேர்ந்­தெ­டுக்­கக்­கூடும் எனத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன. அண்மைய வாரங்களில் திரு டிரம்­பு­டன் திரு பென்ஸ், திரு கிங்ரிச், திரு கிறிஸ்டி ஆகி­யோரை­யும் காண முடி­வ­தாக ஊட­கங்கள் குறிப்­ பிட்­டுள்­ளன. குடி­ய­ர­சுக் கட்­சி­யின் தேசிய மாநாடு திங்கட்­கிழமை முதல் கிளீவ்­லாந்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. அக்­கட்­சி­யின் அதிபர் வேட்­பா­ள­ராக திரு டிரம்ப் அந்த மாநாட்­டில் அறி­விக்­கப்­படு­வார் என எதிர்­பார்க்­ கப்­படு­கிறது.

நியூ ஹாம்ஷயரின் போர்ட்ஸ்மௌத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்ட மேடையில் திருமதி கிளிண்டனும் திரு சாண்டார்ஸும் ஒன்றாகத் தோன்றினர். அப்போது, ஹில்லரி கிளிண்டனை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்ததுடன் அவர் அடுத்த அதிபராவதைத் தான் உறுதிசெய்யப்போவதாகவும் குறிப்பிட்டார் திரு சாண்டர்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!