புகை கக்கிய எரிமலையை அச்சமின்றி உச்சியில் நின்று ரசித்த சுற்றுப்பயணிகள்

இந்தோனீசியாவின் புரோமோ எரிமலை வெடித்து புகையைக் கக்கிய காட்சியை நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்தனர். ஆபத்தான இடம் என்பதையும் பொருட்படுத்தாமல் பல நூறு அடி உயரமான மலையுச்சியின் விளிம்பில் நின்று பல சுற்றுலாவாசிகள் எரிமலையின் சீற்றத்தைக் கண்டு ரசித்தனர். இந்தோனீசியாவின் கிழக்கு ஜகார்த்தாவுக்கு அருகில் உள்ள ப்ரோபோலிங்கோவில் அண்மையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வெளியாகும் புகை நேற்று முன்தினம் 1,200 மீட்டர் உயரம் வரை எழுந்து மேற்கு நோக்கி நகர்ந்தது. அதனால் மாலாங்கில் இருக்கும் அப்துல் ரஹ்மான் சாலே விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

எரிமலையிலிருந்து வெளியேறிய கரும்புகையால் அப்பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!