நடுவர்மன்றத் தீர்ப்பை சீனா மதிக்க வேண்டும்

மணிலா: தென்சீனக் கடல் பகுதி தொடர்பாக அனைத்துலக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை சீனா மதித்து நடக்கவேண்டும் என்று பிலிப்பீன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. மங்கோலியாவில் இன்று தொடங்கும் ஆசிய= ஐரோப்பிய மாநாட்டில் இப்பிரச்சினை குறித்து பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்பெக்டோ யாசே பேசவிருப்பதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. தென்சீனக் கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவதற்கு சட்டப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்றும் நெதர்லாந்தில் அனைத் துலக நடுவர்மன்றம் செவ்வாய்க் கிழமை தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்று சீனா கூறியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் விமானப்படைத் தளம் அமைத்து கண்காணிப்பில் ஈடு படுவதற்கு முழு உரிமை உள்ளது என சீனா திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது.

நடுவர்மன்றத் தீர்ப்பு தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு இருக்கும் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் சீனாவை அது கட்டுப் படுத்தாது என்றும் சீன வெளியுறவு அமைச்சு தெரி வித்துள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு காண அனைவரும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா செந்தம் கெண்டாடி வருகிறது. பிலிப்பீன்ஸ், வியட்னாம், மலேசியா , புருணை ஆகிய நாடுகளும் அப்பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. அந்தக் கடல் பகுதியில் சீனா அதன் கோரிக்கையை வலுப் படுத்தும் வகையில் அண்மையில் பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. அப்பகுதியில் செயற்கைத் தீவுகளை சீனா உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை அனைத்துலக நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றது பிலிப்பீன்ஸ். மூன்று ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!