ஜப்பானியப் பேரரசர் அகிஹிட்டோவுக்கு பதவி துறக்கும் திட்டம் இல்லை

தோக்கியோ: ஜப்பானியப் பேரரசர் அகிஹிட்டோவுக்கு அரியணை யிலிருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று அரண் மனைத் தகவல்கள் கூறின. அடுத்த சில ஆண்டுகளில் பதவி துறக்க தாம் விரும்புவதாக ஜப்பானியப் பேரரசர் அகி ஹிட்டோ தெரிவித்ததாக முன்னதாக தகவல்கள் வெளி யாகின. 82 வயதாகும் திரு அகி ஹிட்டோ, அவரது உடல்நிலை பிரச்சினை காரணமாக அதி காரத்துவ பணிகளைக் குறைத் துக் கொள்ள விரும்புவதால் பேரரசர் பதவியில் நீடித்திருக்க அவர் விரும்பவில்லை என்றும் அவரது முடிவை அவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதாகவும் முன்னதாக வெளிவந்த தகவல்கள் கூறின. ஆனால் பேரரசர் அரியணை யிலிருந்து விலகுவதற்கான அதிகாரத்துவ திட்டம் எதுவும் இல்லை என்று அரண்மனைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜப்பானியப் பேரரசர் அகிஹிட்டோவும் அரசியார் மிச்சிகோவும் ஹயாமாவில் உள்ள இல்லத்திலிருந்து செல்கின்றனர். அவர்களைக் காண அங்கு திரண்டிருக்கும் மக்களைப் பார்த்து அவ்விருவரும் கை அசைக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!