பிரான்சில் அவசரநிலை 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

பாரிஸ்: பிரான்சில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. சென்ற ஆண்டு பாரிஸ் நகரில் 130 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதல் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரான்சில் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் தேதி பாஸ்டில் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். தேசிய விடுமுறையான இந்நாளில், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாழக்கிழமை இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தபோது ஒருவன் லாரியை ஓட்டிச் சென்று கூட்டத்தின் மீது மோதியதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 84 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிமைப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மலேசிய மாணவர் ஒருவர் அத்தாக்குதலில் காயம் அடைந்த தாக அந்த பல்கலைக்கழகம் கூறியது. காயம் அடைந்தவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது. தாக்குதலில் உயிரிழந்த வர்களில் பல சிறுவர்களும் அடங்குவர் என்று பிரெஞ்சு அதிபர் தெரிவித்துள்ளார்.

லாரியை ஓட்டிச் சென்ற நபரை பேலிசார் சுட்டுக்கொன்றனர். தாக்குதலில் ஈடுபட்டவன் டுனிசியா நாட்டைச் சேர்ந்த 31 வயது இளைஞர் எனக் கூறப் படுகிறது. அந்த லாரியில் கையெறி குண்டுகளும் துப்பாக்கிகளும் மேலும் பல ஆயுதங்களும் இருந்த தாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்டது ஒருவரா அல்லது மேலும் யாராவது இருக்கின்றனரா என்பதை அறிய போலிசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. நீஸ் நகரில் தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அது யாராலும் மறுக்க முடியாத ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று பிரெஞ்சு அதிபர் ஹொலாண்ட் தெரிவித்துள்ளார். பிரான்சில் நடந்துள்ள மோசமான தாக்குதல் இது என்று குறிப்பிட்ட திரு ஹொலாண்ட், இத்தகைய தாக்குதல்களை எதிர்த்துப் போராட நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செ-ய்ய வேண்டியது அவசிய மாகிறது என்று குறிப்பிட்டார். பிரான்ஸ் முழுவதும் பயங்கரவாத மிரட்டலின் கீழ் இருப்பதாகவும் அவர் சொன்னார். நீஸ் நகரில் நடந்த தாக்கு தலுக்கு அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு களின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தாக்குதலைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. பிரான்சில் நேற்று கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

நீஸ் நகரில் வாணவேடிக்கையைக் காண திரண்டிருந்த மக்கள் மீது மோதிய லாரிக்கு அருகே போலிசார் சோதனை மேற்கொள்கின்றனர். மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்திருந்தபோது கனரக லாரியை ஓட்டி வந்த ஒருவன் அதை கூட்டத்தினரிடையே மோதியதில் பலர் உயிரிழந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!