விமான நிலைய முனையத்தில் பயணிகளை மட்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலனை

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் முனையங்களுக்குள் பயணிகளை மட்டுமே அனுமதிப் பது குறித்த யோசனையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மலேசிய துணைப் பிரதமர் அகமது சாஹிட் கூறினார். விமான நிலையங்களில் பயணிகள் நுழையும் முனையங்களில் பயணிகளை மட்டுமே அனுமதிப்பது குறித்தும் அவர் களை வழியனுப்ப வந்தவர்கள் அந்த முனையத்திற்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் செய்வது குறித்தும் புதன்கிழமை நடை பெற்ற அமைச்சரவை கூட்டத் தின்போது யோசனை கூறப் பட்டதாகவும் அகமது சாஹிட் கூறினார்.

"மலேசியன் ஏர் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பரிந்துரையை அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்குமாறு தாம் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங்கை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் கூறினார். இந்த யோசனை விரைவில் நடப்புக்கு வரும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். மங்கோலியாவில் நடக்கும் ஆசிய= ஐரோப்பிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய குழுவினருக்கு தலைமைத் தாங்கி அங்கு சென்றுள்ள திரு அகமது சாஹிட் அங்குள்ள மலேசிய செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!