நீஸ் படுகொலைக்கு ஐஎஸ் பொறுப்பேற்றது; மூவர் கைது

நீஸ்: தெற்கு பிரான்­சில் உள்ள நீஸ் நகரில் லாரி ஏற்றி 84 பேரைப் படுகொலை செய்த பாதகச் செய­லுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ளது. அந்தச் சம்ப­வத்­தின் தொடர்­பில் மூவரை போலிசார் கைது செய்­துள்­ள­னர். மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஎஸ் அமைப்­புக்கு ஆத­ர­வா­கச் செயல்­படும் அமாக் செய்தி நிறு­வ­னம் அதன் 'டெலி­கி­ராம்' கணக்­கில், "நீஸ் நகரில் பொது­மக்­களை லாரி ஏற்றிக் கொன்ற ஆள் ஐஎஸ் அமைப்­பின் போராளி," என்று குறிப்­பிட்­டுள்­ளது. ஐஎஸ் அமைப்­புக்கு ஆத­ர­வ­ளிப்­போரைக் குறிவைத்து தாக்­கு­மாறு விடுக்­கப்­பட்ட அழைப்­புக்கு பதி­ல­டி­யா­கவே இந்தத் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­ அது தெரிவித்துள்ளது. தாக்குதலில் மாண்டுபோன 84 பேரில் 10 பேர் குழந்தைகள். காயமுற்ற 202 பேரில் 52 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்­கு­த­லுக்கு ஐஎஸ் பொறுப்­பேற்­றி­ருப்­ப­தன் தொடர்­பில் விசாரணை நடை­பெ­று­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். சென்ற வியா­ழக்­கிழமை இரவு 'பேஸ்டில்' தினத்­தன்று நீஸ் நகரில் கூட்­டத்­தி­னர் மீது லாரியை ஏற்றிக் கொன்ற 31 வயது டுனீ­சி­ய­ரான முகமது லாஹௌயேஜ் பௌஹ்லெல் இஸ்­லா­மி­யத் தீவிர­வாதத்­து­டன் தொடர்­பு டை­ய­வரா என்று போலிசார் ஆராய்ந்து வரு­கின்ற­னர். பயங்க­ர­வாதத் தாக்­கு­த­லில் ஈடு­பட்ட பௌஹ்­லெ­லின் மனைவி, நெருங்­கிய நண்பன் ஆகிய இருவர் வெள்­ளிக்­கிழமை கைது செய்­யப்­பட்­ட­னர். அந்­ந­க­ரின் மத்திய ரயில் நிலை­யத்­தின் அருகே அமைந்­துள்ள சிறிய அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பிலிருந்து மேலும் ஒருவர் கைது செய்­யப்­பட்­டார்.

மூன்று பிள்ளைகளின் தந்தை
84 பேரின் உயிரைப் பலி­கொண்ட பயங்க­ர­வாதத் தாக்­கு­தலை நிகழ்த்­திய லாஹௌயேஜ் பௌஹ்லெல்லுக்கு
3 பிள்ளை­கள் இருந் தா­லும் மனைவி, பிள்ளை­களைப் பிரிந்து தனியாக வாழ்ந்­து­வந்தான். 2005 முதல் பிரான்சில் வசிக்கும் அவன் நிரந்தரவாசத் தகுதி பெற்றிருந்தான். மிரட்­டல், வன்முறை, திருட்டு போன்ற சிறிய குற்­றங்கள் புரிந்த பௌஹ்­லெல்­லுக்கு தீவிர­வாத குழுக்­களு­டன் தொடர்பு இருந்த­தா­கத் தெரி­ய­வில்லை என டுனீசிய பாது­காப்புத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன. "பார்ப்ப­தற்கு பயங்க­ர­மாக இல்­லா­விட்­டா­லும் அவனது பார்வை பயங்க­ர­மாக இருக்­கும். சிறுவரை அவன் வெறித்­துப் பார்ப்­பான்," என அவனது அண்டைவீட்டுப் பெண்மணி தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!