இம்ரான் கானை மணக்க விரும்பிய விளம்பர நாயகி கௌரவக்கொலை

லாகூர்: சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வந்த பாகிஸ்தானிய இளம்பெண் அவரது சகோதரரால் கௌரவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கான்டீல் பாலோச் (படம்) எனும் 26 வயது நடிகையும் விளம்பர நாயகியுமான அந்தப் பெண்ணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள முல்தானில் நேற்று முன்தினம் இரவு கழுத்தை நெரித்துக் கொலை செய்த பிறகு அவரது சகோதரர் வாசிம் தப்பியோடிவிட்டதாக மாவட்ட தலைமை போலிஸ் அதிகாரி அஸார் அக்ரம் கூறினார். இந்த விளம்பர மாடல் தனது இயற்பெயரான ஃபௌஸியா அஸீம் என்பதை கான்டீல் பாலோச் என மாற்றிக்கொண்டார்.

விளம்பரத் துறையிலிருந்து வெளியேறும்படி அவரது குடும்பத்தார் அவரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பாகத் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உள்துறை அமைச்சர், மத்திய புலனாய்வு அதிகாரி ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியிருந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் டான் குறிப்பிட்டது. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான இம்ரான் கானைத் திருமணம் செய்ய விரும்புவதாக அவர் பலமுறை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!