பிரான்சில் பாதுகாப்பை வலுப்படுத்த 12,000 வீரர்கள்

பிரான்சில் பாதுகாப்பை வலுப்படுத்த 12,000 வீரர்கள் பாரிஸ்: பிரான்சின் நீஸ் நகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்புக்கு போர்க் காலப் படை வீரர்கள் 12,000 பேர் முன்வர வேண்டும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டின் எல்லையைப் பாதுகாக்க தேசப் பற்றுள்ள இளைஞர்கள் அனைவரும் போர்க்காலப் படை வீரர்களாகச் சேர முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பெர்னார்டு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நீஸ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஒருவன் லாரியை ஓட்டிச் சென்று மோதியதில் 84 பேர் உயிரிழந் தனர். இவர்களில் பத்து பேர் சிறுவர்கள். தாக்குதலில் காயம் அடைந்த சுமார் 300 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத் தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் மேலும் ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் போலிசார் கூறினர்.

நீஸ் நகரில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வேளையில் பிரெஞ்சு போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!