சந்தேக நபர்கள் நுழைவதைத் தடுக்க மலேசியா புதுத் திட்டம்

அதிநவீன பயணிகள் பரிசோதனை முறையை மலேசியா அறிமுகம் செய்யவிருக்கிறது. அந்தப் புதிய முறை அமலுக்கு வந்தால் மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் பரி சோதனை செய்யப்பட வேண்டிய பயணிகளுக்காகக் காத்திருக்கும் தேவை இராது. மேலும், பயணியைப் பற்றிய விவரம் அந்த அதிகாரிகளுக்கு முன்கூட்டியே கிடைத்துவிடும். போராளிகளை நாட்டுக்குள் நுழை யவிடாமல் தடுத்து நிறுத்த முடியும். மலேசிய உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமது இந்த விவரங்களைத் தெரிவித் ததாக 'த ஸ்டார்' இணையத்தளம் நேற்று குறிப்பிட்டது. "சந்தேக நபர்கள் தாங்கள் இருக்கும் நாட்டில் இருந்து பய ணத்தைத் தொடங்கும் முன்னரே அனைத்துலக போலிஸ் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகளின் தரவுகளில் இருந்து அவர்களைப் பற்றிய விவரங்களை நாடுகடந்து சேகரிக்க முடியும்.

"நாட்டுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவோர் இவ்வாறு முன் கூட்டியே கண்டறியப்படுவதால் அவர்கள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என குடிநுழைவு அதிகாரி கள் உடனடியாக மறுப்புத் தெரி விக்க முடியும். "மேலும், அபாய அறிவிப்பு செய் யப்பட்ட நமது பாதுகாப்பு அமைப் புகள் உடனடியாக செயலில் இறங்கி சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேறி விடாதவாறு போதுமான நட வடிக்கைகளை எடுப்பர்," என்றார் அமைச்சர். தற்போதைய குடிநுழைவுப் பரி சோதனை முறையிலுள்ள சில அம் சங்களைப் பயன்படுத்தி சந்தேக நபர்களை அனுமதிக்கும் வகையில் தற்போதைய குடிநுழைவுப் பரிசோ தனை முறை உள்ளதாகவும் திரு நூர் ஜஸ்லான் தெரிவித்தார். புதிய சோதனை முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவ தற்கான செலவை அரசாங்கமே ஏற்கலாமா அல்லது விமானநிலைய வரி மூலமாக பயணிகளிடம் வசூ லிக்கலாமா என்பது பற்றி பரி சீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!