‘சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சந்தேகமே’

மணிலா: தென்சீனக் கடல் விவகாரம் குறித்து அனைத்துலக நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த சீனாவுடன் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்துவது சந்தேகமே என்று பிலிப்பீன்ஸ் தெரிவித் துள்ளது. வளங்கள் நிறைந்த தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா கூறுவதற்கு வரலாற்று அடிப் படையில் ஆதாரம் ஏதும் இல்லை என்று அனைத்துலக நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்தது. "தீர்ப்பை ஏற்க சீனா மறுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தி யமாகுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை," என்று பிலிப்பீன் சின் வெளியுறவு அமைச்சர் ஃபர்ஃபெக்டோ யாசே நேற்று தெரிவித்தார்.

இரு நாடுகளும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அண்மையில் மங்கோலி யாவில் நடைபெற்ற ஆசியா= ஐரோப்பிய உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட திரு யாசேயும் சீன வெளியுறவு அமைச்சரும் கலந்துரையாடினர். ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறாமல் இருக் கிறது. பிலிப்பீன்சுக்கு சொந்தமான கடற்பகுதியை சீனா ஆக்கிரமித் துள்ளதாக அனைத்துலக நடுவர் மன்றம் தெரிவித்திருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!