தந்தையின் சமாதிக்கு மரியாதை செலுத்திய சூச்சி

யங்கூன்: மியன்மாரின் அரசாங்க ஆலோசகரான ஆங் சான் சூச்சி, சுதந்திர வீரரான தமது தந்தையின் சமாதிக்கு நேற்று சென்று மரியாதை செலுத்தினார். 1947ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்த தமது தந்தையான ஜெனரல் ஆங் சானுக்கும் அவருடன் போராடிய மேலும் எட்டு பேருக்கும் மரியாதை செலுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த சமாதிக்கு 71 வயது திருவாட்டி சூச்சி மலர்வளையம் வைத்தார். இந்த நிகழ்வில் மியன்மாரின் ராணுவத் தலைவர் முதல்முறையாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர வீரர்களுக்கு மரியாதை செலுத்த கூட்டம் திரண்டதால் சமாதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து. மியன்மாருக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே ஜெனரல் ஆங் சாங் மரணம் அடைந்தார். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் மியன்மார் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். திருவாட்டி சூச்சியின் பிரபலத்துக்கும் அவரே காரணம் என்று கூறப்படுகிறது. திருவாட்டி சூச்சி அரசியல் கைதியாக இருந்தபோது தமது தந்தையின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்த அவருக்கு அனுமதி வழங்க ராணுவம் மறுத்தது. ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ராணுவத் தலைவரும் கலந்துகொண்டது மியன்மாரின் புதிய அத்தியாயத்துக்கான சான்று என்று பலர் கருதுகின்றனர்.

தமது தந்தையின் சமாதிக்கு மரியாதை செலுத்தும் திருவாட்டி சூச்சி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!