ஒரு மாதுக்கு உதவிய அமெரிக்க ஊழியருக்கு குவிந்த பாராட்டுகள்

அமெரிக்காவில் வாடகைக் கார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது பணியுடன் நின்றுவிடாமல் இரட்டைக் குழந்தைகளுடன் தவித்த ஒரு தாய்க்கு உதவியிருக்கிறார். ஒரு மாது தனது இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றிருக்கிறார். அவரது கார் சாலை விபத்தில் சிக்கி சேதமடைந்ததைத் தொடர்ந்து வாடகைக்கு கார் எடுக்க வந்திருந்த அந்த மாதுக்கு தக்க நேரத்தில் உதவ முன்வந்தார் அந்நிறுவனத்தின் ஊழியரான ஜான் குட்லெட்.

இரட்டைக் குழந்தைகளுடன் திருமதி வின்சன்ட் தவிப்பதைப் பார்த்த ஜான் குட்லெட் உடனடியாக அங்கு சென்று அவ்விரு குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டார். இந்தக் காட்சி ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 13ஆம் தேதி வெளிவந்ததும் அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணமாக உள்ளது. திருமதி வின்சன்டும் அந்த ஊழியரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். 'இந்த அளவு பரிவும் அக்கறையும் கொண்ட ஒருவரை நான் இதுவரை பார்க்கவில்லை' என்று திருமதி வின்சன்ட் கூறியுள்ளார்.

அமெரிக்க மாதின் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் ஜான் குட்லெட்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!