குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டி யிடுவதற்கு திரு டோனல்ட் டிரம்ப்பை குடியரசுக் கட்சி அதன் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் திரு டிரம்ப் அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய அவர், கட்சியின் வேட் பாளராக அறிவிக்கப்பட்டிருப் பதில் தான் மிகுந்த பெருமை கொள்வதாகக் கூறினார்.

இந்த ஒரு தருணத்தை தம்மால் என்றும் மறக்க முடியாது என்று 70 வயதாகும் கோடீஸ்வரரான திரு டிரம்ப் கூறினார்.

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெறப் போவதாகக் கூறிய டிரம்ப், வா‌ஷிங் டனில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாக உறுதி அளித்தார். கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிக் கப்பட்டதை அடுத்து வீடியோ மூலம் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் சபாநாய கர் பால் ரையன், கட்சியினர் டிரம்ப்புக்குப் பின்னால் அணி திரள வேண்டும் என்று கோரினார். அனைத்து குடியரசுக் கட்சியினரும் ஒன்றுபட்டால்தான், டிரம்ப்பின் வெற்றி உறுதியாகும் என்றும் நாடாளுமன்ற அவைகளில் குடியரசுக் கட்சிக்கு தற்போதுள்ள பெரும்பான்மையுடன் வெள்ளை மாளிகையைப் பிடிப்பதைக் கட்சி யினர் தங்கள் இலக்காகக் கொள்ளவேண்டும் என்றும் ரையன் கூறினார்.

குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக திரு டோனல்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் அதிகமான வாக்குகளைப் பெற்ற 70 வயதாகும் பிரபல தொழில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வேட்பாளராக குடியரசுக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெறப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!