துருக்கியில் அவசரநிலை

அங்காரா: துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் மூன்று மாத அவசர நிலைப்பிரகடனம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆட்சியை ராணுவம் கைப்பற்ற முயற்சி செய்தது. தலைநகரில் ஆங்காங்கே பீரங்கிகளை நிறுத்திய ராணுவத் தினர், முக்கிய பகுதிகள் தங்க ளுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் ராணுவத்தினருக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராணுவத்தினரின் முயற்சி தோல்வியடைந்து மீண்டும் அதிபர் எர்டோகனின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் வந்து உள்ளது.

இருப்பினும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 246 பேர் கொல்லப் பட்டனர். ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு மன்றம், அமைச் சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. இதற்கு அதிபர் எர்டோகன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அதிபர், "ராணு வத்தில் உள்ள கிருமிகளை அகற்றுவோம்," என்று சூளுரைத்தார். மேலும் பேசிய அவர், துருக்கி ஒரு சுமூகமான சூழ்நிலையை எட்டவும் மீண்டும் ஆட்சி கவிழ்க்கப்படாமல் இருக்கவும் மூன்று மாத அவசரநிலை அமலில் இருக்கும்," என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவசர நிலை உடனடியாக அமலுக்கு வந்தது. ஆட்சிக் கவிழ்ப்பு தொடர் பில் சுமார் 10,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காவலை நீட்டித்து தொடர்ந்து சிறையில் வைக்க இந்த அவசர நிலைப் பிரகடனம் உதவும் என்று அங்காரா தகவல் கள் தெரிவிக்கின்றன.

துருக்கி-கிரீஸ் எல்லைக்கு அருகே உள்ள நீதிமன்றத்துக்கு துருக்கிய அதிகாரியை கிரீஸ் போலிஸ் அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். துருக்கியில் ராணுவப் புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கிரீசுக்கு தப்பிய துருக்கிய ராணுவ அதிகாரிகளில் இவரும் ஒருவர். ஹெலிகாப்டரில் தப்பிய இவர்கள் கிரீசில் தரை யிறங்கினர். இவர்கள் மீது சட்டவிரோதமாக கிரீசுக்குள் நுழைந்த தாக குற்றம் சாட்டப் படவிருக்கிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!