டொனல்ட் டிரம்பை அங்கீகரிக்காத டெட் குருசுக்கு பலத்த எதிர்ப்பு

கிளிவ்லாண்ட்: குடியரசுக் கட்சி மாநாட்டில் அதிபர் வேட்பாளராக டோனல்ட் டிரம்ப்பை அங்கீகரிக்காத டெக்சாஸ் செனட்டர் டெட் குருசுக்கு பலத்த எதிர்ப்பு கிளம் பியது. அதனைத் தொடர்ந்து அவர் தனது உரையை முடித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தார். பூர்வாங்க வேட்பாளர் போட்டியில் டெட் குருசும் களத்தில் இருந்தார். ஆனால் அவரை டோனல்ட் டிரம்ப் முந்திவிட்டார். இந்த நிலையில் கட்சி மாநாட் டில் பேசிய டெட் குருஸ், அதிபர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக தேர்வு பெற்ற டோனல்ட் டிரம்பை அங்கீகரிக்காமல் வெறும் பாராட்டு மட்டுமே தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த குடியரசுக் கட்சியின் பேராளர்கள் டெட் குருசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதனால் பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கினார் டெட் குருஸ். இதனைத் தொடர்ந்து துணை அதிபர் வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் உரையை நிகழ்த்த மைக் பென்ஸ் மேடை யேறினார். ஒரு வர்த்தகராக திரு டிரம்பின் சாதனைகளை விளக்கிய திரு பென்ஸ், நவம்பர் மாதம் நாட்டுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது என்றார். "டொனல்ட் டிரம்ப் அதிப ரானால் அமெரிக்காவில் மாற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும்," என்று அவர் உறுதியளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!