சீனாவில் 100 பேர் காணவில்லை அல்லது இறந்திருக்கலாம்

பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் அண்மைய நாட்களாக பெய்துவரும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக நூறு பேர் வரை இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் பெய்ஜிங், ஷங்ஸி, ஹெனான், ஷாங்ஸி ஆகியவை சூழ்ந்துள்ள ஹெபெய் மாகாணத் தில் மட்டும் 24 பேர் மாண்டு விட்டதை குடிமை விவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. பருவ மழையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஹெபெய்யில் 72 பேர் வரை காணவில்லை என்று அது கூறியது. இதற்கிடையே ஹெபெய்யில் உள்ள 11 நகரங்களிலிருந்து சுமார் 123,000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இங்கு ஏறக்குறைய 7,000 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் போக்குவரத்து, எரிசக்தி, தொலைத்தொடர்புகள் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பெய்ஜிங் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க முடியாமல் தவிக்கும் நபர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!