டிரம்ப்: மிரட்டல்களை சமாளிப்பேன்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா எதிர் நோக்கும் பல்வேறு மிரட்டல் களை வெற்றிகரமாக சமாளிக்கப் போவதாக திரு டோனல்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசுக் கட்சியின் நியமனத்தை ஏற்றுக்கொண்ட பிறகு கட்சியின் மாநாட்டில் அவர் உரையாற்றினார். தன்னை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கிளிவ்லேண்ட் நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், "நமது நாட்டை இன்று அச்சுறுத்தும் குற்றச்செயல்களும் வன்முறைச் சம்பவங்களும் விரைவில் முடிவுக்கு வரும்," என்று உறுதி அளித்தார்.

தனது தலைமைத்துவத்தின் கீழ் புதிய அத்தியாயம் உருவாகும் என்றும் பாதுகாப்பு, அமைதி, வளப்பம் நிறைந்த நாடாக அமெரிக்கா விளங்கும் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவுக்கும் சாதாரண மக்களுக்கும் தான் முன்னுரிமை வழங்க இருப்பதாகவும் கோடீஸ் வரரான டிரம்ப் உறுதி அளித்தார். "நான் அதிபராகப் பதவி ஏற்ற நாளிலிருந்து சட்ட ஒழுங்கு அடிப் படையில் நல்லாட்சி நடைபெறும்," என்று அவர் உறுதியளித்தார். சட்ட, ஒழுங்கு இல்லாமல் வளமை இருக்காது என்று கூறிய அவர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவிருப் பதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசுக் கட்சி அதன் வேட்பாளராக 70 வயது கோடீஸ்வரர் டோனல்ட் டிரம்ப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் மாநாட்டின் இறுதி நாளன்று கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய திரு டிரம்ப் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்குப் பக்கத்தில் அவரது மகன் பரூன் டிரம்ப். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!