துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்தார் ஹில்லரி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளரை திருவாட்டி ஹில்லரி கிளின்டன் தேர்வு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ஹில்லரி, அமெரிக்க செனட்டர் டிம் கெய்னை துணை அதிபர் வேட்பாளராக தான் தேர்ந் தெடுத்திருப்பதாக அறிவித்துள் ளார்.

திரு டிம் அரசியல் அனுபவம் மிக்கவர் என்றும் அவர் தனது தனது வாழ்க்கையை மற்றவர் களுக்கு சேவையாற்றுவதற்காக அர்ப்பணித்தவர் என்றும் ஹில்லரி புகழ்ந்து கூறினார். ரிச்மண்ட் நகர மேயராகவும், வெர்ஜினிய மாநில ஆளுநராகவும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப் பினராகவும் அவர் அரிய பணிகளை ஆற்றியிருப்பதாகவும் மற்றவர்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட டிம் கெய்ன்- துணை அதிபர் பதவியை வகிக்க தகுதியானவர் என்றும் ஹில்லரி கூறினார்.

திருவாட்டி ஹில்லரி, தனது ஆதரவாளர்களுக்கு எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் டிம் கெய்னை வெகுவாகப் பாராட்டி யுள்ளார். "துணை அதிபராக இருந்து என்னுடன் இணைந்து இந்த நாட்டை வழிநடத்திச் செல்ல ஒரு நல்ல நண்பர் எனக்குத் தேவை. எனக்கு சிறந்த அறிவுரைகளை வழங்குபவராக அவர் இருக்க வேண்டும். எனது நடவடிக்கை யில் உடன்பாடு இல்லாவிட்டால் அதை நேர்மையுடன் எனக்கு சுட்டிக் காட்டும் துணிச்சல் மிக்க வராகவும் இருக்க வேண்டும்.

தேவைப்படும் வேளைகளில் அதிபரின் பணிகளையும் அவர் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் துணை அதிபர் பதவிக்கு டிம் மிகவும் பொருத்த மானவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்று ஹில்லரி கூறியுள்ளார்.

அமெரிக்க செனட்டர் டிம் கெய்னை துணை அதிபர் வேட்பாளராக ஹில்லரி கிளின்டன் தேர்வு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஹில்லரியும் துணை அதிபர் பதவிக்கு டிம் கெய்னும் போட்டியிடவுள்ளனர். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸை தேர்வு செய்துள்ளார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!