பிரதமர் நஜிப்: உங்கள் களங்கத்தைப் போக்குக

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பில் அமெரிக்க நீதித்துறையின் வழக்குகளில் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் தங்கள் மீதான களங்கத்தை போக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். விசாரணையில் அரசாங்கம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று கூறிய அவர், 1எம்டிபி தொடர்பில் பொதுமக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதிப்படுத் தினார். "பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் மீதான களங்கம் அகற்றப் படுவதற்-கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இதைத்தான் அர சாங்கம் விரும்புகிறது," என்று திரு நஜிப் சொன்னார்.

இதற்கிடையே 1எம்டிபி தொடர் பில் மக்கள் மனம்போன போக்கில் பேசக்கூடாது என்றார் அவர். "சட்டம் அதன் கடமையைச் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். "விரைவில் அல்லது சிறிது காலத்தில் உண்மை வெளி வரும்," என்று சிறப்பு ஹஜ்ஜு யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நஜிப் தெரிவித் தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!