மொவிடா வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் ஆறு பேர் நீதிமன்றத்தில் முன்னிலை

பெட்டாலிங் ஜெயா: மொவிடா உணவகம், மதுபானக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புள்ளதாக சந் தேகிக்கப்படும் ஆறு ஐஎஸ் தீவிர வாதிகள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்ட இமாம் வஹ் யூடின் கர்ஜோனோ, 21, தொழிற் சாலை ஊழியர் ஜஹாலி என்று அழைக்கப்படும் ஜோனியஸ் ஒன்டி, 24, ஆகிய இருவர் மீது மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தில் நீங்கள் ஏதாவது கூற விரும்பு கிறீர்களா என்று கேட்டபோது வஹ்யூடின் ஒன்றுமில்லை என்றும் ஜோனியஸ் இல்லை என்பதுபோல தலை அசைத்தான் என்றும் நீதி மன்றத் தகவல்கள் தெரிவித்தன.

இருவரும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்றனர். குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் அவர்களுக்கு விதிக்கப்படலாம். இருவரையும் வழக்கறிஞர்கள் யாரும் பிரதி நிதிக்கவில்லை. கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவரான ஃபசார் நோர் ரெடுவானை போலிசார் அழைத்துச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!