ஆசியான்: தென் சீனக் கடலில் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்

வியன்டியான்: தென் சீனக் கடற் பகுதியில் சீனா உரிமை கொண் டாடுவதை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஆசியான் நாடுகளுக்கு இடையே மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணுவமற்ற தென் சீனக் கடலின் முக்கியத்து வத்தை வலியுறுத்திய ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், அங்கு எல்லா நடவடிக்கைகளிலிருந்தும் சுயமாக விலகியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அண்மைய அனைத் துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அமைச்சர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வட்டாரத்தில் அவநம்பிக் கையையும் பதற்றத்தையும் அதி கரித்து அமைதி மற்றும் பாது காப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் நில மீட்பு, நில விஸ்தரிப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து சில அமைச்சர்கள் எழுப்பிய கவலை கள் கவனத்தில் கொள்ளப்பட்டன என்று வியன்டியானில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு வெளியிடப் பட்ட கூட்டு அறிக்கையில் ஆசி யான் அமைச்சர்கள் குறிப்பிட் டனர். அமைதி, பாதுகாப்பு, தென் சீனக்கடலில் சுதந்திரமான கடற் பயணம் ஆகியவை முக்கியம் என்று உறுதிபடுத்திய அவர்கள், பரஸ்பர நம்பிக்கை, அங்கு எல்லா விதமான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதை ஊக்குவித்தல், சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்த்தல் போன்றவை முக்கியம் என்று கூறினர்.

இருந்தாலும் இம்மாதம் 12ஆம் தேதி சீனாவுக்கு எதிரான அனைத் துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அறிக்கையில் ஆசியான் அமைச்சர்கள் குறிப்பிடவில்லை. தென் சீனக் கடற்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் தமக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.கடந்த மாதம் குன்மிங்கில் நடைபெற்ற ஆசியான், சீனா சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு ஆசியான் அமைச்சர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ஆனால் லாவோசுக்கும் கம் போடியாவுக்கும் சீனா கடும் நெருக்கடி கொடுத்தாகக் கூறப்பட்டதால் அந்த கூட்டு அறிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சருடன் கைகுலுக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (வலமிருந்து 2வது), வியட்நாமிய வெளியுறவு அமைச்சர் பாம் பின் மின்னும் (இடம்), பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்ஃபக்டோ யாசேயும்(வலம்) உடன் உள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!