ஜப்பானில் இயலாதோர் பராமரிப்பு இல்லத்தில் கொடூரம்: 19 பேர் கொலை

ஜப்­பா­னில் நேற்று அதி­காலை­யில் கொடூ­ர­மான கத்­திக் குத்­துத் தாக்­கு­தல் நடந்தது. இதில் 19 பேர் கொல்­லப்­பட்­ட­னர். 25 பேர் படு­கா­ய­மடைந்த­னர். கொல்­லப்­பட்­ட­வர்­களில் 10 பெண்­களும் அடங்­கு­வர். டோக்­கி­யோ­வின் புற­ந­கர்ப்­ப­கு­தி­யில் இய­லா­தோ­ருக்­கான பரா­ம­ரிப்பு இல்லம் ஒன்­றில் இந்தச் சம்ப­வம் நிகழ்ந்தது. ஜப்­பா­னில் போருக்­குப் பிறகு நடந்த கொடூ­ர­மான சம்ப­வம் இது எனக் கூறப்­படு­கிறது. 'சுகி யமா­யுரி=என்' என்று அழைக்­கப்­படும் அந்த இல்லம் டோக்­கி­யோ­வின் தென்­மேற்­குப் பகு­தி­யில் 50 கி.மீ தொலை­வி­லுள்ள சகா­மி­காரா நக­ரத்­தில் உள்­ளது. அதிகாலை சுமார் 2.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக அவ் வட்டார காவல்துறை தெரி வித்தது.

இந்தத் தாக்­கு­த­லுக்­கும் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­திற்­கும் தொடர்பு இருப்­ப­தற்­கான எந்த­வொரு ஆதா­ர­மும் இல்லை என அந்­நாட்டு நாடா­ளு­மன்றத் தலைமைச் செய­லா­ளர் யோ‌ஷி­ஹிடே சுகா செய்­தி­யா­ளர்­களுக்கு அளித்த பேட்டி ஒன்­றில் தெரி­வித்­தார். "இய­லா­தோர் இல்­லத்­தில் யாதும் அறியா அப்­பா­வி­கள் மீது நடத்­தப்­பட்ட இந்தக் கொடூ­ர­மான தாக்­கு­தல் நெஞ்சைப் பிழி­ய வைக்­கும் வகை­யில் அதிர்ச்­சி­யாக உள்­ளது," என்று மேலும் அவர் கூறினார். இந்தக் கொலைகளை நிகழ்த்­தி­ய­வர் என சந்­தே­கத்­தின் பேரில் கைது­செய்­யப்­பட்ட 26 வயது ஆட­வர், அந்த இல்­லத்­தின் முன்னாள் பணி­யா­ளன். அவன் தானே முன்வந்து காவல்­துறை­யி­­டம் காலை 3.00 மணிக்கு சர­ணடைந்தான். அப்­போது அவன் கறுப்பு டி=சட்டை அணிந்­தி­ருந்­தா­ன். "நான்தான் அவர்­களைக் கொன்­றேன். உல­கத்­தில் உள்ள அனைத்து இய­ லா­தோரை­யும் துடைத்­தொ­ழித்து விட்­டால் நன்றாக இருக்­கும்," என்று கூறினான்.

சட்­டோ‌ஷி உய­மட்சு என்ற அந்த ஆண், கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் ஒரு கடி­தம் எழு­தி­யி­ருந்தான். அக்­க­டி­தத்­தில் "நான் அந்த இய­லா­தோர் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் உள்ள 470 பேரை­யும் துடைத்­தொ­ழிக்­கப் போகி­ றேன்," என்று மிரட்­டி­யி­ருந்தார் என கியோடோ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!