பிரான்சின் ரோவன் நகர் தேவாலயத்தில் பிணை பிடிக்கப்பட்ட பாதிரியார் கொலை

பிரான்­சின் வடக்­குப் பகு­தியின் ரூவன் நக­ரி­லுள்ள ஒரு தேவா­ல­யத்­தில் அடை­யா­ளம் தெரி­யாத இரு­வ­ரால் பிணை­யா­கப் பிடித்து வைக்­கப்­பட்­டி­ருந்த பாதி­ரி­யார் மீட்பு நட­வ­டிக்கை­யின்­போது கொல்­லப்­பட்டு விட்­ட­தாக பிரான்ஸ் காவல்­துறை வட்­டா­ரம் தெரி­வித்­தது. பிணை பிடித்து வைத்­தி­ருந்த அந்த இரண்டு பேரும் யார் என்­ப­தும் அவர்­க­ளது நோக்கம் என்ன என்­பதும் இன்­னும் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது. காவல்­துறை­யின் அதி­ரடி நட­வ­டிக்கை­யின்­போது ஏற்­பட்ட தாக்­கு­த­லில் அந்த பாதி­ரி­யார் உயி­ரி­ழந்த­தாக பிரான்­சின் உள்­துறை அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார். பிணை பிடிக்­கப்­பட்­டி­ருந்த­வர்­களில் ஒரு­வர் பாதி­ரி­யார் என்­றும் அவர் பிளே­டால் கழுத்­த­றுக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­ட­தாகவும் காவல்­ துறை வட்­டா­ரம் தெரி­வித்­தது. மற்ற ஐந்து பிணை­யா­ளி­களும் கடுமை­யா­கக் காய­மடைந்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

பிணை பிடிக்­கப்­பட்­டி­ருந்த­வர்­களில் கிறிஸ்­தவப் பெண் துற­வி­கள் இரு­வ­ரும் அடங்­கு­வர். தாக்­கு­தல் நட­வ­டிக்கை­யின்போது பிணை பிடித்­த­வர்­கள் இரு­வ­ரும் வெளி­யில் தப்­பிக்க முயன்ற­போது காவல்­துறை­யி­ன­ரால் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். பிரஞ்சு அதி­பர் ஃபி­ரான்காய்ஸ் ஹாலண்டேயும் உள்­துறை அமைச்­சர் பெர்­னர்ட் கஜி­நி­யு­வும் சம்பவ இடத்­திற்கு வந்து பார்வை­யிட்­ட­னர். "தேவா­ல­யத்­தில் இது­போன்ற சம்ப­வம் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான ஒன்று என்று சாடி­யுள்­ளார் அந்­நாட்­டின் பிர­த­மர் மானு­வல் வால்ஸ். பிரான்­சின் தேசிய நாளின் போது நீஸ் நக­ரில் கூட்­ட­மான பகு­தி­யில் ட்ரக் வாக­னம் வேக­மாக செலுத்­தப்­பட்­டதில் 84 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு 300க்கு அதி­க­மா­னோர் காய­மடைந்த­னர். இது நிகழ்ந்து இரண்டு வாரத்­தில் தேவா­லய பிணை பிடிப்புச் சம்ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!