வலுவான தலைமைத்துவத்தை என்னால் தர முடியும்: கிளின்டன்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கு வலுவான தலைமைத்துவத்தை தம்மால் தர முடியும் என்று திருமதி ஹில்லரி கிளின்டன் அறிவித் துள்ளார். அமெரிக்காவில் வேலை வாய்ப்பு களை உருவாக்கி பொருளியல் வளர்ச்சி அடையச் செய்வேன் என்றும் ஹில்லரி கூறினார். ஜனநாயகக் கட்சியின் வேட் பாளராக ஹில்லரி அறிவிக் கப்பட்டதும் அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அவர் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை யில் உரையாற்றினார். அமெரிக்கா மிகப் பெரிய சவால்களை எதிர்நோக்குவதாகக் கூறிய ஹில்லரி, தற்சமயம் அமெரிக்க மக்கள் மீண்டும் எண்ணிப்பார்த்து சீர்தூக்கி முடிவு எடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறினார். குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவை பிரிக்கும் சக்தியாக விளங்குகிறார். நாடு முழுவதும் பிரிவினை என்ற பயத்தை அவர் ஏற்படுத்தி வருவதாகவும் ஹில்லரி கூறினார்.

உலக நாடுகளிலிருந்து அமெரிக் காவை அவர் பிரிக்க நினைக் கிறார். இதன் மூலம் நாட்டுக்கு ஆபத்து உருவாகும். அனைவரது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தவும் அவர் நினைக்கிறார் என்று ஹில்லரி குற்றம் சாட்டினார். வெளிநாட்டினர் குடியேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்டப் போவதாக குடியரசு கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் தீர்மானித்திருப்பதாகவும் ஹில்லரி குறிப்பிட்டார்.

ஹில்லரி தனது குடும்பப் பின்னணி குறித்தும் பதவியில் இருந்தபோது நிகழ்த்திய தனது சாதனைகள் மற்றும் பணிகள் குறித்தும் விளக் கினார். அவர் தன் மகள் செல்சியை கட்சித் தொண்டர் களிடம் அறிமுகப்படுத்தினார். தனது பெருமைக்குரிய மகள் என அவர் புகழ்ந்து பேசினார். அதேபோன்று செல்சியும் தனது தாயாரின் பெருமைகளை எடுத் துரைத்தார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முதல் பெண் வேட்பாளராக களத்தில் இறங்கும் ஹில்லரி அடுத்த அதிபராக வர அனைத்து தகுதிகளும் உடையவர் என்று அதிபர் ஒபாமா, மிஷெல் ஒபாமா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக ஹில்லரி கிளின்டனை அக்கட்சி அறிவித்த பிறகு அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஹில்லரி பல வண்ண பலூன்களுக்கு இடையே கொண்டாட்டத்தில் திளைக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!