விளக்கக் கூட்டங்களில் முகைதின்

சுபாங் ஜெயா: 1எம்டிபி நிறுவன விவகாரம் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அதுபற்றி விளக்கமாக எடுத்துரைக்க பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சி நாடு முழுவதும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விளக்கக் கூட்டத் தொடரில் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் ஒரே மேடையில் காணப்பட்ட முகைதின், முக்கியமாக நகர்ப் புறங்களிலும் புறநகர் பகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தவிருப்பதாகக் கூறினார். ‚1எம்டிபி விவகாரத்தை எளிய முறையில் பரவலாக எடுத்துச் சொன்னால் மட்டுமே அதன் தாக்கத் தையும் நாட்டுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பையும் மலேசிய மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என திரு முகைதின் யாசின் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!