சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்

மாஸ்கோ: சிரியாவில் ரஷ்யாவுக்குச் சொந்தமான ஒரு ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து வீரர்களும் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அலெப்போ நகரில் உள்ளவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிவிட்டு அந்த ஹெலிகாப்டர் திரும்பிக் கொண்டிருந்தபோது கிளர்ச்சித் தரப்பினர் அதனை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சிரியாவில் ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுச் சண்டை நீடிக்கும் வேளையில் சிரியா அதிபர் அல்-ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரில் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற அரசாங்கப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ள வேளையில் ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!