பிறந்தநாள் விழாவில் தீ: 13 இளையர் மரணம்

பிரான்சின் வடக்கு நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தீப்பற்றி யதில் 13 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமுற்றனர். ரூவென் நகரிலுள்ள கியூபா லிப்ரே என் னும் இரவு உல்லாச விடுதியில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. விடுதியின் கீழ்த்தளத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக் கிழமை நள்ளிரவு பிறந்தநாளுக் காகக் கொளுத்தப்பட்ட மெழுகு வர்த்தியின் மூலம் தீ பரவியதாக நம்பப்படுகிறது. அந்த கீழ்த்தளத் தின் கூரை எளிதில் தீப்பற்றக் கூடிய 'பாலிஸ்டைரின்' பொருளால் அமைக்கப்பட்டிருந்ததால் மெழுகு வர்த்தி ஏற்றப்பட்டதுமே தீ உடன டியாகப் பரவியதாகத் தெரி கிறது. தீயில் எரிந்த கூரையிலிருந்து நச்சுப் புகை வெளிக்கிளம்பியது.

பிறந்த நாள் கொண்டாட்டத் திற்குத் திரண்டு இருந்தவர்கள் உடனடியாக தப்பிச்செல்ல இயலா தவாறு நச்சுப்புகை அவர்களின் சுவாசத்தை அடைத்ததாகச் சொல் லப்படுகிறது. மாண்டோர் 18க்கும் 25க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் தீப்பற்றியதைத் தொடர்ந்து வெடிப்புச் சம்பவம் எதுவும் நிகழ வில்லை என்றும் போலிசார் தெரி வித்தனர். தீயை அணைக்க ஐம்பதுக்கு மேற்பட்ட தீயணைப் பாளர்கள் போராடினர். பத்து நாட்களுக்கு முன்பு இதே ரூவென் நகரில்தான் கிறித் துவ பாதிரியார் ஒருவர் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்டார். அந்த சோகத்திலிருந்து மீள்வதற் குள் அந்நகர மக்களுக்கு இச்சம் பவம் மேலும் துயரத்தைத் தந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. தீ சம்பவம் தொடர்பாக நீதி விசா ரணை நடத்தப்பட்டு வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸிநியுவ் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!