காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த மலேசிய மாது

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு மாது அவரது காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்ததாக போலிசார் கூறினர். கூ குவான் யென் என்ற 40 வயதான மாது காரிலிருந்து இறங்கியதும் பின்பக்கமாக நகர்ந்துவந்த காரை தடுத்து நிறுத்த முயன்றபோது அந்தக் காருக்கு அடியில் அவர் சிக்கிக் கொண்டதாக போலிசார் கூறினர். தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் காருக்கு அடியில் சிக்கியிருந்த மாதினை மிகுந்த சிரமப்பட்டு வெளியில் கொண்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மாது இறந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். கோலாலம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக போலிசார் கூறினர்.

காருக்கு அடியில் சிக்கியமாதைக் காப்பாற்ற தீயணைப்பாளர்கள் சிரமப்படுகின்றனர். படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!