பாத்தாமில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

ஜகார்த்தா: ஒரு பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 6 பேர் பாத்தாம் தீவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்தீவில் உள்ள ஹாங் நடிம் விமான நிலையத்தில் துப்பாக்கி கள் ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாத்தாம் விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. போலிஸ் அலுவலக வளாகத்தில் முக்கிய நுழைவாயிலில் தடுப்புக் கம்பிகள் போடப்பட்டுள்ளதாகவும் ஆயுதம் ஏந்திய 10 போலிசார் அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் 'பாத்தாம் போஸ்' பத்திரிகை தெரிவித்தது.

கேஜிஆர் அல்லது கத்திபா ஜிஆர் எனப்படும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஆறு பேரை இந்தோனீசிய பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படை போலிசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் களில் அந்த பாத்தாம் குழுவின் தலைவனான 31 வயது ஜிகி ரஹ்மட் டெவாவும் ஒருவன். ஜிகியும் இந்தோனீசிய பயங்கரவாதியான பஹ்ருன் நைமும் சேர்ந்து பாத்தாமிலிருந்து ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் மரினா பே மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக இந்தோனீ சியப் போலிசார் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!