‘சீனா சட்டத்தை மதிக்க வேண்டும்’

மணிலா: தென்­சீ­னக் கடல், கிழக்­குச் சீனக் கடல் விவ­கா­ரங்களுக்­குச் சட்­டப்­படி தீர்­வு­கா­ணும்ப­டி­யும் சட்­டத்தை மதித்து நடந்து கொள்­ளு­மா­றும் சீனாவை பிலிப்­பீன்­சின் வெளி­யு­ற­வு அமைச்சர் பெர்­ஃ­பெக்டோ யாசே வலியுறுத்தி­உள்­ளார். வட்­டா­ரப் பாது­காப்பு, கடற்­துறைப் பாது­காப்பு ஒத்­துழைப்பு ஆகி­ய­வற்றைப் பற்றி கலந்­துரை­யாட ஜப்பான் வெளி­யு­ற­வு அமைச்சர் ஃபூமியோ கி‌ஷிடாவை பிலிப்­பீன்­சில் யாசே நேற்று சந்­தித்­தார். அப்போது பிலிப்­பீன்­சுக்கு கப்பல், விமா­னங்கள் அளித்து உத­வு­வ­தாக ஜப்பான் தரப்­பில் மறு­உ­றுதி அளிக்­கப்­பட்­டது. பத்து கப்­பல்­களை பிலிப்­பீன்­சுக்கு ஜப்பான் வழங்க­வுள்­ளது. நான்கு டிடி90 ரக கண்­கா­ணிப்பு விமா­னங்களை­யும் பிலிப்­பீன்­சுக்கு அது குத்­தகைக்கு வழங்க­ உள்­ளது.

சம­ர­சத்­துக்கு இட­மின்றி கடற்­துறைச் சட்டம், பாது­காப்பு விதிகளை சீனா கடைப்­பி­டிக்க வேண்டும் என திரு யாசே செய்­தி­யா­ளர்­களி­டம் கூறினார். திரு கி‌ஷி­டா­வும் அதே கருத்தை வலி­யு­றுத்­தினார். தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்சும் கிழக்கு சீனக் கடல் பகு­தி­யில் இருக்­கும் சிறு தீவு­களுக்கு ஜப்பானும் உரிமை கோரும் விவ­கா­ரத்­தில் சீனா­வு­டன் வேறுபாடு கொண்­டுள்­ளன. சர்ச்சைக்­கு­ரிய தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் சீனா அண்மைக்­கா­ல­மாக நில மீட்புப் பணி­களில் ஈடு­பட்டு ராணுவ பலத்தை­ மேம் படுத்­து­வது வட்டார நாடுகளை விழிப்படையச் செய்துள்ளது. சென்ற மாதம் அனைத்­து­லக நீதி­மன்றம் தென்­சீ­னக் கடல் முழு­வ­தும் தனக்­குச் சொந்தம் எனும் சீனாவின் கோரிக்கையை நிரா­க­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!