வகுப்பறையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்; ஒரு கண்ணில் பார்வை பறிபோகும் அபாயம்

மலேசியாவின் ஜோகூர் மாநி லத்தில் மாணவர் ஒருவர் தூக்கி எறிந்த அளவுச்சட்டம் 14 வயது மாணவியின் கண்ணில் தாக்கி யதைத் தொடர்ந்து அந்த மாணவி யின் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. வகுப்பறையில் நடந்த சண் டையை நிறுத்துமாறு ஹெச். ஷாலினி என்னும் அந்த மாணவி சொன்னபோது சக மாணவர் ஒருவர் அந்த பிளாஷ்டிக் சட் டத்தை எறிந்ததாக ஷாலினியின் உறவினர் கே. லெட்சுமிகாந்தன், 39, தெரிவித்தார்.

எஸ்எம்கே செலசா ஜெயா 2ல் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார். "வழக்கம்போல பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வருவதற் காகச் சென்றபோது ஷாலினி கண்களைப் பொத்தியவாறு அழுது கொண்டு இருந்தாள்.

"உடனடியாக அவளை கேபிஜெ சிறப்பு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றேன். விழித் திரையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்து வர்கள் சொன்னார்கள். "வலது கண்ணில் கிழிந்து விட்ட திசுவை சரிசெய்ய உடனே அதனைச் செய்தாக வேண்டும் என்றார் மருத்துவர். "அதன்படி இரண்டு மணி நேரம் ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது," என்றார் லெட்சுமிகாந்தன். மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் ஆனால் அதன் பிறகு அந்தச் சிறுமிக்கு வலக்கண்ணில் பார்வை வருமா என உறுதிகூற முடியாது என்றும் அந்த மருத்துவர் தெரி வித்ததாக அவர் கூறினார்.

சிகிச்சை பெற்றுவரும் மாணவி ஷாலினியும் அவரது உறவினர் லெட்சுமிகாந்தனும். படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!