பழ வியாபாரி கத்தியால் குத்திக் கொலை

கோலாலம்பூர்: டுரியான் பழ வியாபாரியிடம் டுரியான் வாங்கிய ஒருவர் அவை சுவையாக இல்லை என்று கூறி அந்த வியாபாரியை கத்தியால் தாக்கியதாகவும் அத்தாக்குதலில் வியாபாரி உயிரிழந்ததாகவும் போலிசார் கூறினர். இந்தச் சம்பவம் தாமான் ஸ்ரீ கிஜாங் பகுதியில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்ததாக பினாங்கு உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கத்திக் குத்து தாக்குதலில் கடுமையாகக் காயம் அடைந்த பழ வியாபாரி ஓங் டிங் சான் (61) மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் நடந்த 20 மணி நேரத்தில் பழ வியாபாரியை கத்தியால் குத்திய 20 வயதான சந்தேகப் பேர்வழி சிபிராங் மருத்துவமனையில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பழ வியாபாரிக்கும் அந்த சந்தேகப் பேர்வழிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் ஒரு கத்தியை அந்தப் பழக் கடையிலிருந்து எடுத்து அவரைத் தாக்கியதாக ஆரம்ப கட்ட புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த உயர் அதிகாரி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!