மலேசியாவில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

மலே­சி­யா­வின் பத்­து­மலை­யி­லுள்ள ஓர் இந்­துக் கோயில், சில கேளிக்கை விடு­தி­கள், காவல் நிலை­யங்கள் ஆகி­ய­வற்­றில் தாக்­கு­தல் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­ட­தாக ஐஎஸ் தீவி­ர­வா­தி­கள் என சந்­தே­கிக்­கப்­படும் 3 பேரை மலே­சிய தீவிரவாதத் தடுப்புப் போலி­சார் நேற்று முன்தினம் கைது செய்­துள்­ள­னர். மலே­சி­யா­வின் தேசிய தினத் திற்கு முந்தைய நாளில் வெடி­குண்டு, துப்­பாக்கி போன்ற ஆயு ­தங்க­ளால் மேற்­கண்ட இடங்களில் தாக்­கு­தல் நடத்த இந்த மூவ­ரும் திட்­ட­மிட்­டி­ருந்தது தெரிய வந்­ துள்­ளது. புக்­கிட் அமான் தீவி­ர­வா­தத் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளால் சிலாங்­கூர், பாகாங் ஆகிய நக­ரங்களில் கடந்த வாரம் சனி, ஞாயிறு ஆகிய நாட்­களில் அவர் கள் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­கப் பேர்­வ­ழி­கள் மூவ­ரும் இந்தத் தாக்­கு­தல் மேற்­கொள்­வ­தற்கு ஐஎஸ் தீவி­ர­வாதி முக­மது வாண்டி முக­மது ஜெடி என்­ப­வர் ஆணை பிறப்­பித்­துள்­ளது விசா­ரணை­யில் தெரிய வந்­துள்­ள­தாக காவல்­துறை தலைமை அதி­காரி காலிட் அபு பக்கர் கூறினார். ஆகஸ்ட் 27ஆம் தேதி 20 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்டு சிலாங்­கூ­ரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரி­டம் கே75 ரக கையெறி குண்டு, கைத்­துப்­பாக்கி, 9மிமி துப்­பாக்­கிக் குண்­டு­கள் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­ட­தாக அந்த அதி­காரி தெரி­வித்­தார். ஐஎஸ் தீவி­ர­வா­தி­யான முக­மது வாண்­டிக்­கும் இவ­ருக்­கும் இடையே இன்னொரு­வர் உள்­ள­தா­க­வும் அவரே இந்த ஆட­வ­ருக்கு ஆயு­தங்களை வழங்­கி­யி­ருக்க வேண்­டும் என்று நம்பப்­படு­வ­தாகவும் அதி­காரி காலிட் தனது அறிக்கை ஒன்­றில் தெரிவித்துள்­ளார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­ பட்­டுள்ள மற்ற இரண்டு சந்­தே­கப் பேர்­வ­ழி­களில் ஒரு­வ­ருக்கு வயது 20, மற்­ற­வ­ருக்கு வயது 27. இவர்கள் மூவ­ருமே தங்களுக்கு அளிக்­கப்­பட்­டுள்ள தாக்­கு­தல் இலக்கை நிறை­வேற்­றியபின் சிரி­யா­வுக்­குச் செல் ­வ­தற்­குத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர் என்று திரு காலிட் தெரி­ வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!