மலேசிய அமைச்சர் எச்சரிக்கை: புதிய ஸிக்கா தொற்று ஏற்படலாம்

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய ஸிக்கா கிருமி தொற்றுச் சம் பவங்கள் ஏற்படலாம். சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் நேற்று இவ் வாறு எச்சரித்தார். உள்ளூரிலேயே ஸிக்கா கிருமி பரவி சாபாவைச் சேர்ந்த ஒரு வருக்கு ஸிக்கா தொற்றியதால் அமைச்சரின் எச்சரிக்கை வெளி யாகியிருக்கிறது. கோத்தா கினபாலுவில் இரண் டாவது ஸிக்கா சம்பவம் உறுதி செய்யப்பட்டது மலேசியாவில் ஸிக்கா கிருமி இருப்பதைக் காட்டுகிறது என்றார் அவர். "இந்த நோயாளி, ஸிக்கா தொற்று நோய் அதிகமாகக் காணப்படும் எந்தவொரு நாட்டுக் கும் செல்லவில்லை.

இதன் மூலம் இவருக்கு உள்ளூரிலேயே நோய் தொற்றி யிருப்பது தெரிய வந்து உள்ளது," என்று நேற்று ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் சுப்பிரமணியம் குறிப் பிட்டார். இந்த நிலையில் எங்கிருந்து இந்த கிருமி வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர். ஸிக்கா கிருமியால் பாதிக்கப் பட்ட கோத்தா கினபாலுவைச் சேர்ந்த அந்த 61 வயது நபர் சனிக் கிழமை அன்று இறந்து விட்டார். ஆனால் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்ட அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததையும் அமைச்சர் சுப்பிர மணியம் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!